Sunday, November 10, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநான்காவது டோஸ் குறித்து இன்னமும் தீர்மானமில்லை

நான்காவது டோஸ் குறித்து இன்னமும் தீர்மானமில்லை

March 1, 2022 – 6:00am

மூன்றாவது டோஸ் நோய் எதிர்ப்பை வலுப்படுத்தும்

இலங்கையர்களுக்கு நான்காவது டோஸை கொள்வனவு செய்யவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆனால் 3 ஆவது டோஸ் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் செயல்முறை விரைவுபடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் டோஸிற்கான கொள்முதல் உத்தரவை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறதா என வினவிய போது, அதிக ஆபத்துள்ள குழுவின் கீழ்வரும் அனைத்து இலங்கையர்களுக்கும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடுவதே அரசாங்கத்தின் இப்போதைய இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். தொற்று நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் மரணமடைவதையும் தடுக்கும் ஒரே வழி இலங்கையர்களிடையே பூஸ்டர் டோஸ் அல்லது 3ஆவது டோஸ் கொண்ட மெதுவான முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 168,96,733 பேரில் 71,39,133 கொவிட் 19 நோயாளிகளுக்கு மாத்திரமே பூஸ்டர் டோஸ் மூலம் தடுப்பூசி வழங்கப்பட்டது. அது திருப்திகரமாக இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றாத மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரமான வைரஸ் தொற்றுக்கு எதிராக தங்கள் அமைப்பை அமைக்க 3 வது டோஸ் அவசியம் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இன்னும் நான்காவது டோஸை பரிந்துரைக்க உள்ள போதிலும், புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு அல்லது நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா வழங்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். “30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களும் சரியான நேரத்தில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களைப் பெற்றால், எதிர்வரும் மாதங்களில் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Send Push Notification: 



<!——>








கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கி சூடு

கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...

Keep exploring...

Related Articles