ஜனாதிபதி அக்கறையாக உள்ளதாக டக்ளஸ் தெரிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றங்கள் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தேசிய கடற்றொழிலாளர் மகா சம்மேளனத்தின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடியினாலும், சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளாலும் மீனவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிகளினால் கடற்றொழில் செயற்பாடுகள் பாதிப்படையக் கூடாது என்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனமாக உள்ளார்.
இந்த நெருக்கடிகளில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.