March 1, 2022 – 10:26am
இவ்வருடத்தின் இரண்டு மாதக் காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 450க்கும் அதிகமானோர் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் 434வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் 457 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Send Push Notification: