Friday, May 9, 2025
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுபமிலியன்ஸ், கே.கே.எஸ் அணிகள் கிண்ணம் வென்றது

பமிலியன்ஸ், கே.கே.எஸ் அணிகள் கிண்ணம் வென்றது

March 1, 2022 – 6:00am

யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்தினால் வருடத்தம் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் நடத்தும் 2020/21ஆண்டுக்கான ரவ்பாயேல் மகாராஜா வெற்றிக் கிண்ணத்துக்கானகூடைப்பந்தாட்டத்தொடரில்பெண்கள் பிரிவில் பமிலியன்ஸ் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது.

குறிந்த தொடர் பழைய பூங்காவில் அமைத்துள்ள யாழ்.மாவட்ட கூடைப்பந் தாட்டதிடலில் (26) திகதி சனிக்கிழமை 6.30 மணிக்கு மின் ஒளியில் இடம் பெற்றது.இதில் பெண்களுக்கான இறுதியாட்டத்தில் கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பமிலியன்ஸ் அணி மோதிக் கொண்டன.இதில் பமிலியன்ஸ் 44 :40 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து இடம் பெற்ற ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கே.கே.எஸ் அணி மோதிக்கொண்டன. இதில் கே.கே.எஸ் விளையாட்டுக்கழகஅணி65 :53 என்றபுள்ளிஅடிப்படையில் வெற்றி பெற்றது.

(யாழ்.விளையாட்டு நிருபர்)

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles