Thursday, January 23, 2025
31 C
Colombo
செய்திகள்வணிகம்'Oukitel' மற்றும் 'Blackview' Smart Phone' களின் இலங்கை விநியோகஸ்தராக Brantel நிறுவனம் நியமனம்

‘Oukitel’ மற்றும் ‘Blackview’ Smart Phone’ களின் இலங்கை விநியோகஸ்தராக Brantel நிறுவனம் நியமனம்

February 3, 2022 – 6:00am

இலங்கையில் E-tel கையடக்கத் தொலைபேசிகளின் வணிக நாமத்தைக் கட்டியெழுப்பிய Brantel நிறுவனம், ஐரோப்பாவின் முக்கியமான இடங்களை உள்ளடங்கிய, உலகம் முழுவதுமான 80 நாடுகளில் பாவனைக்குப் பிரபலமான மேலும் இரண்டு Smart phone களின் விநியோகஸ்தத்தைத் தனதாக்கியுள்ளது.

சீன உற்பத்திகளான Oukitel” மற்றும் “Blackview கைபேசிகளின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக நியமனம் பெற்றதுடன்,Brantel நிறுவனமானது நீடித்த பாவனை, அதிசிறந்தj Battery பாவனை, உயர்வான கொள்ளவுடைய RAM மற்றும் ROM சிறப்பான கமெரா மற்றும் உயிரியல் முறையிலான உறுதிப்படுத்தல் உட்பட்ட புத்தம்புதிய அம்சங்களுடன் கூடிய உத்தரவாதத்துடனான கையடக்கத் தொலைபேசிளை சந்தைப்படுத்த முதலில் தெரிவுசெய்யவுள்ளது.

இந்த இரண்டு தயாரிப்புக்களுடன், சிறப்பம்சங்கள் மற்றும் செயலாற்றல் ஆகியவற்றில் சந்தையிலுள்ள புத்தம்புதிய Smart phoneகளுக்கு நிகராகவும்; ஆனால் உலகளவில் முன்னணி தயாரிப்பு நாமங்களின் விலைப்பட்டியலைவிட குறைந்த விலையில் வழங்கிவரும் தமது மூலோபாயங்களை Brantel தொடரவுள்ளது. Oukitel தயாரிப்பு வடிவங்களில் Brantel, உச்சபட்ச இயக்கு சக்தியை வழங்கக்கூடிய P60 octa-core processor இனால் இயங்குவதும், அதியுயர் தரமான எடுக்க உதவும் தன்னிகரற்ற 20 MP கொண்ட தரமான கமெராவுக்காக அறியப்படுவதுமான C21 I ஐ வழங்குகிறது. மற்றொன்று பிரகாசமான வர்ணங்களுடனும் 6.49 அங்குல அதிதுல்லியமான HD+ தரத்துக்கு மேலதிகமாக ஈர்ப்பினை ஏற்படுத்தும் கணினி வலுவுடனும் வரும் ஆரம்பநிலை Oukitel C19 . Blackview விடமிருந்து நிறுவனமானது பலவித வர்ணங்களிலும் octa-core 4Gநவநாகரிக Smart phone ஆன Blackview A90, “Budget king” Blackview A80 Plus ஆகியவற்றை வழங்குகிறது. இவ் Smart phone களை Brantel காட்சியறைகளிலும், www.brantelonline.com க்கு விஜயம் செய்வதன் மூலமாகவும் அல்லது நாடு முழுவதும் உள்ள விற்பனையாளரிடமும் கொள்வனவு செய்துகொள்ளலாம். இணையவழி வாடிக்கையாளர் 15வீதம் வரையிலான விசேட விலைக்கழிவுகளை பெற்றுக்கொள்வதோடு நாடு முழுவதுமான விநியோக வசதிகள் வழங்குவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles