செயற்பாட்டு மூலதனத்துக்கான தேவையைக் கொண்டுள்ள வர்த்தக சமூகத்துக்குஉதவும் வகையில் என்றAsset Draft புதிய சேவையை எசட்லைன் லீசிங் கம்பனிலிமிடட் (எசட்லைன்) அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. சிறியமற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிதித் தேவைகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இத்துறையில் உள்ள வணிகங்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களின் செயற்பாட்டு மூலதனத்தை அடையமுடியாத வகையில் உள்ள வரையறைகள் இன்றி மேலதிகப் பற்று வசதியைப் போல இது அமையும். இதுகுறுகிய காலத்துக்கு மாத்திரமன்றி நீண்டகால,ஆண்டு முழுவதும் பணவரவை முன்னேற்றக் கூடிய நிதியளித்தல் மற்றும் வணிக வாய்ப்புகளை மேம்படுத்தவும் நிதியுதவி வழங்குகிறது.
அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய எசட்லைன் பிரதமநிறைவேற்று அதிகாரியும்,பணிப்பாளருமான அஷான் நிசங்க குறிப்பிடுகையில்,“எமதுநாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருக்கும் தொழில் முனைவோர்,சிறியமற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதேஎப்பொழுதும் எமதுநோக்கமாகும். அவர்களின் முன்னேற்ற மேநாட்டின் முன்னேற்றம் என்பதுடன், இந்தப் பயணத்துக்கு எமது உற்பத்தி மற்றுமொரு மைல்கல்லாக அமையும் ”என்றார்.
எசட்லைன் லீசிங் கம்பனிலிமிடட் நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான அஷான் நிசங்க, ருவன் கென்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ருவன் டாபரேவுக்கு Asset Draft வவசதிகளைக் கையளிக்கிறார்.