Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்வணிகம்நெதர்லாந்தின் FMO இடமிருந்து நீண்ட கால நிதி வசதிகளுக்காக 10 மில். டொலர் பெற்றுள்ள...

நெதர்லாந்தின் FMO இடமிருந்து நீண்ட கால நிதி வசதிகளுக்காக 10 மில். டொலர் பெற்றுள்ள Alliance Finance நிறுவனம்

February 3, 2022 – 6:00am

இலங்கையின் மிகப் ப​ழைமையான நிதி நிறுவனமான அலையன்ஸ் பினான்ஸ் கம்பனி பிஎல்சி (Alliance Finance Company PLC – AFC), MSME வணிகத்தின் வளர்ந்து வரும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்காக நீண்ட கால அடிப்படையிலான 10 மில்லியன் டொலர் நிதியளிப்பு வசதியின் ஒரு பகுதியாக, டச்சு தொழில் முனைவோர் மேம்பாட்டு வங்கியான FMO யிடருந்து 5 மில்லியன் டொலரை இரண்டாவது கட்ட தொகையாக பெற்றுள்ளது.

2020 இன் பிற்பகுதியில் 2021 இன் முற்பகுதியில் டச்சு தொழில்முனைவோர் மேம்பாட்டு வங்கியான FMO இடமிருந்து 10 மில்லியன் அமெரிக்க டொலர் வசதியைப் பெற்ற AFC இல் முதல் தவணையாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றது. 6.3 பில்லியன் யூரோ பெறுமதியான பல்வேறு முதலீட்டு பிரிவுகளுடன், FMO ஆனது 85 நாடுகளில் முதலீடுகளைக் கொண்ட மிகப் பெரிய ஐரோப்பிய இருதரப்பு தனியார் துறை அபிவிருத்தி வங்கிகளில் ஒன்றாகும்.

பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் நாட்டின் MSME துறைக்கும் இந்த நிதியுதவிகள் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றன. AFC இன் பிரதித் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோமானி டி சில்வா இது குறித்து தெரிவிக்கையில், “AFC இன் MSME மையப்படுத்தப்பட்ட வணிக மூலோபாயத்திற்கு இது ஒரு முக்கியமான மைல்கல் என்பதுடன், எமது MSME திட்டங்களில் FMO இன் கூட்டாண்மை காரணமாக நாம் ஊக்கமும் உற்சாகமும் அடைந்துள்ளோம். நாட்டில் MSME துறையை மேம்படுத்துவது தொடர்பில் AFC-FMO கூட்டாண்மையானது AFC இன் வளர்ந்து வரும் சர்வதேச நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.

கடந்த ஆண்டு AFC ஆனது, ஜேர்மனியின் சர்வதேச நிலைபேறுத் தன்மை தரநிலைகள் மதிப்பு சார்ந்த நிதி நிறுவனங்கள் (International Council of Sustainability Standards for Value-Driven Financial Institutions -ICSSVDFI) அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படும் வங்கி மற்றும் நிதித் துறையில் முழுமையான நிலைபேறான தன்மைக்காக, தெற்காசியாவில் முதலாவது சான்றளிக்கப்பட்ட நிதி நிறுவனமாக தெரிவானது. 2018 ஆம் ஆண்டில் இதேபோன்ற வசதியுடன் AFC இற்கு FMO உதவியுள்ளதால், FMO இற்கு இது புதிய விடயமல்ல. இந்த வசதியானது, 5 ஆண்டுகளுக்கான நிலையான வட்டி வீதத்தை கொண்டுள்ளது.

இதன் மூலம் AFC அதன் இருப்புநிலைக் குறிப்பில் (balance sheet), சொத்து மற்றும் பொறுப்பை உரிய வகையில் சமனிலையில் காண்பிக்கும் வகையில் நிர்வகிக்க உதவுகிறது. அத்தகைய உலகளாவிய உயர்ந்த நிதி வசதிகளை AFC உடனடியாகப் பெறுவது, நிலைபேறான நிதியுதவியில் எம்மால் நிரூபிக்கப்பட்டு அவதானம் செலுத்தப்பட்டமை தொடர்பிலான சர்வதேச அங்கீகாரத்தின் சான்றாகும். இது மக்கள், பூமி, இலாபம் ஆகிய மூன்று அடிப்படை விடயங்களில் எமது பாரிய அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles