ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் நாமமாக தெரிவாகியதையிட்டு அமானா வங்கி தனது ஊழியர்களை கௌரவிக்கின்றது
அண்மையில்World HRD Congress இனால்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஆசியாவின் சிறந்ததொழில் வழங்குநர் வர்த்தக நாமங்களில் ஒன்றாக அமானா வங்கி தெரிவாகியிருந்தது. இலங்கையின் சிறந்த தொழில்வழங்குநர் வர்த்தக நாமங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, பிராந்திய ரீதியிலான இந்தகௌரவிப்பு அமானா வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தது. ஒன்லைன் கட்டமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் அமானா வங்கிக்கான இந்தவிருதை வங்கியின் செயற்பாடுகளுக்கான உபதலைவர் இம்தியாஸ் இக்பால் பெற்றுக் கொண்டார்.
ஆசியாவின் சிறந்ததொழில் வழங்குநர் வர்த்தக நாமத்துக்குரிய வெற்றிக் கிண்ணத்தையும், சான்றிதழையும் அமானா வங்கியின் மனிதவளங்கள் பிரிவின் தலைமை அதிகாரி பர்ஹான் ரிஃபாய்,வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீரிடம் கையளிப்பதையும், அருகில் வங்கிச்செயற்பாடுகளுக்கான உபதலைவர் இம்தியாஸ் இக்பால் காணப்படுவதையும் காணலாம்.