Monday, May 5, 2025
32 C
Colombo
செய்திகள்விளையாட்டுஆறுதல் வெற்றி அல்லது வைட் வொஷ்; இன்று இறுதி ஆட்டம்

ஆறுதல் வெற்றி அல்லது வைட் வொஷ்; இன்று இறுதி ஆட்டம்

February 10, 2017 – 2:18am

 

தென்னாபிரிக்கா – இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா 3–0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இலங்கை 2–1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. இதேபோல் 5 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரையும் தென்னாபிரிக்கா கைப்பற்றி இருந்தது. அந்த அணி இதுவரை நடந்த 4 போட்டியிலும் வென்று 4–0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. தென்னாபிரிக்கா இந்த ஆட்டத்திலும் வென்று வெள்ளைச்சலவை செய்யும் ஆர்வத்தில் உள்ளது. 



<!——>








Keep exploring...

Related Articles