January 9, 2017 - 12:42pm
Rizwan Segu Mohideen
வர்த்தகம்
றிஸ்வான் சேகு முகைதீன்
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.01.2017) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.
நாணயம்
கொள்வனவு விலை (ரூபா)
விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்
107.38
112.25
கனடா டொலர்
111.18
115.60
சீன யுவான்
21.13
22.17
யூரோ
155.01
160.98
ஜப்பான்...
February 10, 2017 - 2:18amவிளையாட்டு
தென்னாபிரிக்கா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா 3--0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இலங்கை 2--1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. இதேபோல் 5 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரையும் தென்னாபிரிக்கா கைப்பற்றி இருந்தது. அந்த அணி இதுவரை நடந்த 4 போட்டியிலும் வென்று 4--0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. தென்னாபிரிக்கா இந்த ஆட்டத்திலும் வென்று வெள்ளைச்சலவை செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
Share
February 3, 2017 - 2:00amவிளையாட்டு
2012-ம் ஆண்டு இலண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் அன்டோனியா கிரிவோஷப்கா என்ற ரஷ்ய வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் ரஷ்ய அணிக்கு வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
2012-ம் ஆண்டில் இலண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் அஞ்லோட்டத்தில் ரஷ்ய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த அணியில் இடம் பெற்று இருந்த 4 வீராங்கனைகளின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் அன்டோனியா கிரிவோஷப்கா என்ற வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரஷ்ய அணிக்கு வழங்கப்பட்ட வெள்ளிப்பதக்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் பறித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
Share
February 1, 2017 - 4:00amவிளையாட்டு
தென்ஆபிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ் பர்க்கில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை தென்ஆபிரிக்கா 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கிலும் வென்றன. 5 ஒருநாள் போட்டித் தொடரில் போர்ட் எலிசபெத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் தென்ஆபிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
தென்ஆபிரிக்கா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி டேர்பனில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்தப் போட்டியிலும் வெல்லும் ஆர்வத்தில் தென்ஆபிரிக்கா உள்ளது.
Share