Saturday, July 27, 2024
29 C
Colombo
அரசியல்ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்

சில நாட்களுக்கு முன்னர், அசர்பைஜான் எல்லையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று, தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாபச் செய்தியையும் பதிவிட்டார்.

ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பலரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைந்தோம் என்றும், விசேடமாக இலங்கைக்கும் எம்மோடு தொடர்புடைய பிராந்தியத்துக்கும் அவர்களின் இழப்பு பாரிய நட்டமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஈரானும் இலங்கையும் நெடுகாலமாக நட்போடு திகழ்கின்றன. இலங்கையின் அபிவிருத்திக்கு அவர் பல ஒத்துழைப்புகளை நல்கியுள்ளார். விசேடமாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு ஈரான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியது. இதை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம் என ஈரான் தூதுவரிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அச்சுப் பணிகளுக்கு நாம் தயார்

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான அச்சுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தயார் என அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு தேவையான அனைத்து...

Keep exploring...

Related Articles