Monday, October 7, 2024
27 C
Colombo
கிழக்குநள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை இழுத்து சென்ற பொலிஸார்

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை இழுத்து சென்ற பொலிஸார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (12) கஞ்சி வழங்கிய மூன்று பெண்களை பொலிஸார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை, சாம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மூவரையும் சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது கமலேஸ்வரன் தென்னிலா, கமலேஸ்வரன் விஜிதா, காளிராஜா சுஜா ஆகிய மூன்று பெண்களே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரவு வேளையில் துப்பாக்கிகளுடன் வந்த ஆண், பெண் பொலிஸாரால் அநாகரிகமான முறையில் கைதானவர்கள் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரகுமாரும் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொலிஸார் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles