பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் சுற்றுலாப் பயணிகளுக்காக புறா தீவு தேசிய பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக உலக வன ஜீவராசிகள் தினமான நேற்று ஆளுநரால் உத்தியோகபூர்வமாக புறா தீவு தேசிய பூங்கா (Pigeon Island) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நிலாவெளி சுற்றுலா அபிவிருத்தி குழு,திருகோணமலை ஹோட்டல் சங்கம் மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுற்றுலா பணியக தவிசாளர் மதன்,வனவிலங்கு ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.