Friday, February 14, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுறிசாட் - மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் : இருவர் காயம்

றிசாட் – மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் : இருவர் காயம்

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டத்தின் போது ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இதன் போது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியின் பிரதான வீதிக்கு அருகாக இன்று இரவு 8 மணியளவில் காதர்மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது குறித்த பகுதிக்கு உந்துருளியில் பிரவேசித்த சிலர் பொதுக்கூட்டத்தைப் பார்த்துக் கூச்சலிட்டனர்.

சற்றுநேரத்தில் குறித்த உந்துருளிகளுக்குப் பின்னால், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத்தொடரணி கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தன.

இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டதன் காரணமாக றிசாத் பதியுதீன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்

சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்

மோதலின் போது இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பின் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் மோதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles