முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் காரை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் எடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (11) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
