Monday, October 7, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு75 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு

75 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு

கட்டுநாயக்க விமானத்தில் உள்ள ஃபிட்ஸ் ஏர் குரியர் சேவை ஊடாக கொண்டுவரப்பட்ட பார்சலில் இருந்து 2.139 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்கத் தடுப்புப் பிரிவின் கட்டுநாயக்க அலுவலக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொலொம்பியாவின் பொகோட்டாவில் இருந்து கனேமுல்ல பகுதியிலுள்ள முகவரிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட பார்சலில் மின் சாதனத்தில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சந்தேகத்தின் பேரில் 23 மற்றும் 24 வயதுடைய இருவர் மற்றும் சரக்கு அனுமதி முகவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கொக்கெய்ன் கையிருப்பின் பெறுமதி 75 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கையிருப்பு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles