சஜித்தின் அல்லது அனுரவின் எதிர்காலத்தை அல்ல, உங்கள் மற்றும் உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து எரிவாயு சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (10) பிற்பகல் கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து மக்கள் படும் இன்னல்களைப் போக்க சஜித்தோ அல்லது அனுராவோ முன்வரவில்லை எனவும், கஷ்டப்பட்டு மீண்டு வந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.