கொழும்பில் இருந்து கண்டி பிரதான வீதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வரக்காபொல – தும்மலதெனிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்து வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.