நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கி வர்த்தகர்கள் வெளிநாடுகளில் தொழில் தொடங்குவதற்கு உதவுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொட மற்றும் களனி பிரதேசங்களில் நேற்று (04) இடம்பெற்ற வர்த்தகர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை வெளிநாடுகளில் முதலீடு செய்ய வழிவகுப்பதற்கான சரியான திட்டத்தை இதுவரை எந்த அரசும் தயாரிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், தனது ஆட்சியின் கீழ் மிக விரைவில் அப்பகுதியில் வர்த்தக தூதரகங்களை நிறுவி, பல்வேறு உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு இப்பகுதியில் முதலீடு செய்ய அரசு ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார்.