பாரிஸில் இடம்பெற்றுவரும் பரா ஒலிம்பிக் தொடரில் நேற்று (02) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F64) போட்டியில் சமித துலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
67.03 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த தூரத்துடன், துலான் F44 பிரிவில் தனது முந்தைய உலக சாதனையை (66.49 m) முறியடித்துள்ளார்.
குறித்த பிரிவில் இந்தியாவின் சுமித் ஆன்டில் 70.59 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றதுடன், அவுஸ்திரேலியாவின் மிட்செல் புரான் 64.89 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
அத்துடன் இது பாராலிம்பிக் போட்டிகளில் சமித துலான் கொடித்துவக்கு பெறும் இரண்டாவது பதக்கமாகும்.