கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் தங்காலை மரகொல்லிய பாலத்தில் இன்று (30) அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
பேருந்தின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், பேருந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தின் முன் இடது பகுதி சேதமடைந்துள்ளது.
இதன்போது பேருந்தில் இருந்த 5 பயணிகளும் ஆற்றில் விழுந்ததுடன், பொதுமக்கள் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.