இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 427 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 143 ஓட்டங்களையும் மற்றும் கஸ் எட்கின்சன் 118 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் அசித்த பெர்னாண்டோ 102 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மிலான் ரத்நாயக்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.