யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வண்ணார் பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்து இரத்தம் வடிந்த நிலையில் உரிய சிகிச்சை பெறாமல் தவிர்த்து வந்துள்ளார்.
சில வாரங்களுக்கு பின்னர் மூதாட்டிக்கு தோல் வருத்தம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.