ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்டதை ஈரானின் அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்மாயிலின் வீட்டின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேல் நேற்று பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ரும் கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.