வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்களுக்காக விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (15) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, காலி மற்றும் பெலியத்த ஆகிய இடங்களில் இருந்து இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், கிராமங்களுக்குச் சென்ற மக்களுக்காக இன்று (15) மற்றும் நாளை (16) விசேட பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.