Wednesday, January 14, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்தல்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்தல்

கொம்பனி தெரு – கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரிக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (10) பிற்பகல் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து சந்தேகநபர் போதைப் பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

63 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles