Tuesday, January 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குக - டயனா MP

பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குக – டயனா MP

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பௌத்த நாடான தாய்லாந்து பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கியுள்ளது என்றும், அது அவர்களின் மதம் அல்லது கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கஞ்சா ஏற்றுமதியை எவ்வாறு சட்டப்பூர்வமாக்குவது என்பதை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அதற்கு அதிகாரிகள் தடையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு GSP வரிச்சலுகைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் மற்றும் குடியுரிமை குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவற்றைப் பெறுவதற்கு 22ஆவது அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயனா மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles