எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தும் காலத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பில் ஆராய்வதற்கான மக்கள் கருத்தறியும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.