Friday, June 20, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளனர்.

மின்சார துண்டிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (02) இடம்பெற்றது.

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, விடயத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல், மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles